கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு பகுதியை சேர்ந்தவர் நிமிஷா பிரியா. சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர். அங்குள்ள தேவாலயத்தின் உதவியால் நர்சிங் படிப்பில் சேர்ந்து தேர்ச்சி பெற்றார். 1.1.89ல் இவர் பிறந்தார். தற்போது அவருக்கு 36 வயது ஆகிறது.
2008ல் ஏமன் சென்றார். அங்கு ஒரு தனியார் மருத்துவமனையில் பணிக்கு சேர்ந்தார். பின்னர் சொந்தமான ஒரு மருத்துவமனையை தொடங்க எண்ணினானர். இதற்காக அந்த நாட்டு சட்டத்தின்படி அந்த நாட்டை சேர்ந்த ஒருவரை பங்குதாரராக சேர்த்துக்கொண்டார்.
அவரது பெயர் தலால் அப்டோ மக்தி. இவர் நாளடைவில் நிமிஷா மீது அதிக உரிமை எடுத்துக்கொண்டார். தன்னை கணவராக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மிரட்டத் தொடங்கினார். இதனால் அவர்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது. கோர்ட்டுக்கு சென்றார் நிமிஷா தீர்வு கிடைக்கவில்லை.
இந்த நிலையில் தலால் மக்தி 2017ல் சவுதி எல்லையில் பிணமாக மீட்கப்பட்டார். உடல் வெட்டப்பட்டு இருந்தது. உடற்கூறு ஆய்வில் கெட்டமைன் என்ற போதை பொருள் கொடுக்கப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக நிமிஷாவை ஏமன் போலீசார் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். இந்த பழியை நிமிஷா மறுத்தார்.
வழக்கை விசாரித்த ஏமன் உச்சநீதிமன்றம் 2018ல் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. நிமிஷா பிரியாவுக்கு, ஜூலை 16-ம் தேதி (இன்று) தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது.
இதற்கிடையேநிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிராக, அவரது குடும்பத்தினர் மற்றும் இந்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டின் பேரில், உச்ச நீதிமன்றம் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை நிறுத்தி வைத்து, விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. எனவே இனி அவருக்கு தூக்கு தண்டனை வழங்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.