Skip to content

கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியில் நிர்மலா சீதாராமன் ஆய்வு

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் பரப்புரை செப்டம்பர் 27 அன்று வேலுசாமிபுரத்தில், கரூர்-ஈரோடு நெடுஞ்சாலையில் நடைபெற்றது. இது த.வெ.க தலைவர் விஜய்யின் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட பரப்புரைக் கூட்டமாகும்.

இந்தக் கூட்டத்தில் ஏற்பட்ட அதிகப்படியான கூட்ட நெரிசல் காரணமாக, தள்ளுமுள்ளு ஏற்பட்டு, 39 முதல் 40 பேர் உயிரிழந்தனர், இதில் 10 குழந்தைகள் உட்பட. மேலும், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து தமிழக அரசு உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. த.வெ.க மற்றும் விஜய் மீது சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன, மேலும் இது தொடர்பாக பல அரசியல் கட்சிகள் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளன.

இந்த நிலையில், பிரதமர் மோடியின் அறிவுறுத்தலில் கரூர் வேலுச்சாமிபுரம் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தை ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டு வருகிறார். காவல் துறை அதிகாரிகளிடம் நடந்தவற்றை கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து, கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எல்.முருகன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நலம் விசாரித்தனர்.

error: Content is protected !!