மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இன்று முதல்வர் ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது முதல்வரின் நலம் குறித்து விசாரித்தார். இந்த சந்திப்பின்போது மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவும் உடனிருந்தார்.
முதல்வரை சந்தித்தது குறித்து வைகோ நிருபர்களிடம் கூறியதாவது: முதல்-அமைச்சரின் உடல்நலம் குறித்து விசாரித்தேன். கவின் படுகொலையில் அரசு எடுத்த நடவடிக்கையை வரவேற்கிறேன். ஆணவக்கொலைகளை தடுக்க கடும் சட்டம் இயற்ற வேண்டும் என முதல்வரிடம் வலியுறுத்தினேன். 2026 தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். கூட்டணி அரசு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. திமுக தனித்து பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். பாஜக உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகளுடன் என்றைக்கும் கூட்டணி இல்லை. தேமுதிக திமுக கூட்டணிக்கு வந்தால், மதிமுக வெளியேறும் என்பது தவறு.
இவ்வாறு அவர் கூறினார்.