இந்தியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கு எதிரான சம்பவம் குறித்து பிரதமர் மோடி, பாராளுமன்ற வளாகத்தில் தனது கண்டனத்தை தெரிவித்தார். ஆனால், மணிப்பூர் கலவரம் குறித்து பாராளுமன்றத்தில் இதுகுறித்து அவர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. பிரதமர் மோடியை பாராளுமன்றத்தில் பேச வைப்பதற்கு இது ஒரு சிறந்த வழியாகும் என்பதால், எதிர்க்கட்சிகள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர். மாநிலங்களைவிலும் இதுபோன்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படலாம் எனத் தெரிகிறது.
மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்…. இந்தியா கூட்டணி முடிவு
- by Authour
