இந்தியா மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தானின் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. இது தற்போது போராக உருவெடுத்துள்ள நிலையில் இந்த போர் எத்தனை நாட்கள் நீடிக்கும் என்று சொல்ல முடியாத நிலையில், பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்த நிலையில், போர் காரணமாக இந்தியாவில் உணவு தானிய தட்டுப்பாடு, அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு போன்ற சமையல் எரிவாயு தட்டுப்பாடு வராது என மத்திய உணவு பாதுகாப்புத்துறை அறிவித்து உள்ளது. போதுமான அளவு கையிருப்பு உள்ளது என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.
பஞ்சாப், சண்டிகரில், உணவு தானியங்களை பதுக்கி வைக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் தற்போது கையிருப்பில் உள்ள உணவு தானியங்கள் குறித்து அறிக்கை அளிக்கும்படியும் நீதிபதி உத்தரவிட்டார்.