கரூர், சென்னை, கோவை உள்பட பல்வேறு இடங்களில் இன்று வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீடுகளிலும் சோதனை நடப்பதாக சில ஊடகங்களில் தகவல் வெளியானது. இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

கரூர், சென்னையில் உள்ள எனது வீடுகளில் வருமானவரி சோதனை நடைபெறவில்லை. எனது தம்பி வீடு மற்றும் அவரது நண்பர் வீடுகளில் சோதனை நடக்கிறது. வருமான வரி சோதனை முடிந்த பிறகு இது தொடர்பாக கூறுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.