திருச்சி மாநகராட்சி மாமன்ற சாதாரணக்கூட்டம் ம மேயர் மு.அன்பழகன் தலைமையில், ஆணையர் லி. மதுபாலன், துணை மேயர் ஜி.திவ்யா தனக்கோடி ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் துணை ஆணையர் பாலு, நகரப் பொறியாளர்
பி. சிவபாதம் ,மண்டலக்குழுத் தலைவர்கள் மதிவாணன், துர்காதேவி, விஜயலட்சுமி கண்ணன், ஜெய நிர்மலா,மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் ,நகர் நல அலுவலர்,செயற்பொறியாளர்கள், மாநகராட்சி உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளார்கள், சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-
எல்.ரெக்ஸ் (காங்கிரஸ்) :-
சிறப்பான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதனை நான் வரவேற்கிறேன். இன்னும் ஒரு வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. 65 வார்டுகளிலும் சாலைகளில் உள்ள பள்ளங்கள் மற்றும் போர் வெல்களை சரி செய்ய சிறப்பு நிதியாக வார்டு ஒன்றுக்கு ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்
சுரேஷ்( சிபிஎம்) :-
எனது வார்டில் கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மேல்நிலை நிறுத்திக்க தொட்டி கட்ட ஆவண செய்த அமைச்சருக்கும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜவகர் (காங்கிரஸ்) :-
செலவு செய்தால் பற்றாக்குறை ஏற்படுவது சகஜம்..
பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய மேயர் மற்றும் ஆணையர்
ஆகியோர் திட்டங்களை அறிவித்துள்ளார்கள்.
20 ஆண்டுகால கோரிக்கையான பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், 40 ஆண்டு கால கோரிக்கையான ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம் கட்டியதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் இந்த பட்ஜெட்டை வரவேற்கிறேன்.
ந.பிரபாகரன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி) :-
வாய்க்கால் பராமரிப்புக்கு ரூ. 100 கோடி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அது எந்தெந்த நீர் நிலைகளில் எவ்வாறு திட்டமிடப்பட்டுள்ளது?
மேயர் அன்பழகன்:-
இதன் முக்கிய நோக்கம் கழிவுகள் நீர் நிலைகளில் கலப்பதை தடுப்பதுதான். குடியிருப்புகள் மற்றும் வர்த்தக மையங்கள் நிறைந்துள்ள பகுதிகளில் எளிதில் குப்பைகளை கொட்டாத வண்ணம் கம்பி வேலி உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் உயிர கொண்டான் இரட்டை வாய்க்கால் உள்ளிட்ட மாநகருக்குள் செல்லும் நீர்நிலைகளில் மேற்கொள்ள கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது
எல்ஐசி சங்கர் (திமுக):–
திருச்சி மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பல கட்டிடங்கள் வருவாய் இல்லாமல் கிடக்கிறது.
பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் முனையம் மூலமாகவும் மாநகராட்சிக்கு எதிர் பார்த்த வருவாய் கிடைக்கவில்லை கடந்த இரண்டு மாதமாக அங்கு ஏசி வேலை செய்யவில்லை
பைஸ் அகமது: (மனிதநேய மக்கள் கட்சி) :-
எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்க பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது இதனால் எங்கள் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் சத்யா நகர் மற்றும் புது மாரியம்மன் கோவில் தெரு பகுதிகளில் உள்ள பொதுக் கழிப்பிடங்கள் பராமரிக்கப்படாமல் உள்ளது அதனை சரி செய்து தர வேண்டும் .
வழக்கறிஞர் செந்தில் (திமுக):-
அனைத்து திசைகளிலும் இருந்து போற்றும் வகையில் திருச்சி மாநகராட்சியில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன அதற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் மண்டலக் குழு தலைவர் மதிவாணன் ஆகியோர் மூலமாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் மக்கள் பட்ட அல்லல்களுக்கு
திமுக ஆட்சியில் முதல்வரின் திட்டங்களால் தீர்வு ஏற்பட்டுள்ளது சாலை மற்றும் குடிநீர் மேம்பாட்டு பணிகள் திருச்சி மாநகராட்சியில் சிறப்பாக நடைபெற்றப்பட்டுள்ளது. 2023 ல் கோட்ட வாரியாக சமுதாயக் கூடங்கள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது ஆனால் எனது வாடில் இடம் ஒதுக்கீடு செய்யப்படும் சமுதாயக்கூடம் அமைக்க இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை அதனை நிறைவேற்றி தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
தொடர்ந்து திமுக மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் பட்ஜெட்டை வரவேற்றுப் பேசினர்.
கோ.கு. அம்பிகாபதி (திருச்சி மாநகராட்சி அதிமுக தலைவர்):-
திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலைய பணிகளுக்கு மாநகராட்சி பொது நிதி முழுவதையும் முன்னிட்டு செலவழித்து விட்டனர்.இதனால் வார்டுகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வளர்ச்சி திட்ட பணிகள் எதுவும் நடைபெறவில்லை.கேட்டால் அதை செய்துள்ளோம், இதை செய்துள்ளோம் என்று கூறுகிறார்கள்.பஞ்சப்பூர் பஸ் நிலையம் இதுவரை நடந்த பணிகள் குறித்து முழு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
முத்துச்செல்வம் (நிதிக்குழு தலைவர்):-
திருச்சி மாநகராட்சியில் எண்ணற்ற வளர்ச்சி திட்ட பணிகள் நடந்துள்ளன.திருவெறும்பூர் பஸ் நிலையம்,திருவரங்கம் பஸ் நிலையம் கட்டப்பட்டுள்ளது என்றார்.
அப்போது அதிமுக கவுன்சிலர்களுக்கும்,திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதை அடுத்து,அதிமுக கவுன்சிலர்கள் கோ.கு. அம்பிகாபதி அரவிந்தன், அனுசியா

ரவிசங்கர் ஆகியோர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் அவர்கள் வெளியே வந்தபின் நிருபர்களிடம் கூறியதாவது:-
திருச்சி மாநகராட்சி அதிமுக தலைவர் கோ.கு
அம்பிகாபதி கூறும்போது,…
திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகளுக்கு மாநகராட்சி பொது நிதி முழுவதையும் செலவழித்து விட்டார்கள் இதனால் வார்டுகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை கடந்த பட்ஜெட்டில் 110 கோடிக்கு வெள்ள தடுப்பு சுவர் கட்டுவதாக அறிவிக்கப்பட்டு அந்தத் திட்டத்தையும் நிறைவேற்றவில்லை.
பஞ்சப்பூர் பேருந்து முனையம் முன்பாக விபத்துகளை தடுக்க என் மேம்பாலம் கட்டவில்லை என கேள்வி எழுப்பினேன். அதற்கு மேயர் உங்கள் பொதுச் செயலாளர் இடம் சொல்லி பிரதமரிடம் நிதி ஒதுக்க சொல்லுங்கள் என கேலி செய்கிறார்கள். இதனால் வெளிநடப்பு செய்தோம்.
இது பற்றி கேள்வி எழுப்பினால் எங்களை அவமதிக்கிறார்கள் என்றார்
தொடர்ந்து மாநகராசி அதிமுக கொறடா சி.அரவிந்தன் கூறும்போது…
பஞ்சப்பூரில் ரூபாய் 250 கோடி செலவில் கட்டப்பட்ட லாரி முனையம் இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை இது தொடர்பாக மாநகராட்சியில் கேள்வி எழுப்பியபோது மேயர் பதிலளிக்காமல் அவரது தூண்டுதலின் பேரில் திமுக கவுன்சிலர்கள் கேலியும் கிண்டலும் செய்தனர். அதனால் நாங்கள் வெளிநடப்பு செய்தோம் என்றார். தொடர்ந்து மாநகராட்சி கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மொத்தம் 133 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

