Skip to content
Home » வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்…. முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள்…. முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

  • by Senthil

தமிழ்நாட்டில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய 3 மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யும். அதன்படி, அடுத்த மாதம் அக்டோபர் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இது டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் . தென்மேற்கு பருவமழை பொய்த்துவிட்ட நிலையில் விவசாயிகள் வடகிழக்கு பருவமழையை எதிர்பார்த்து காத்துக்கொண்டு உள்ளனர். இந்நிலையில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்தும், மழையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைசசர்கள் கே.என். நேரு, ஐ. பெரியசாமி ,  தங்கம் தென்னரசு,  அனிதா ராதாகிருஷ்ணன், எ.வ. வேலு, கேகே எஸ்எஸ் ஆர் ராமச்சந்திரன், , மாசு, பன்னீர் செல்வம், தலைமைச்செயலாளா் சிவதாஸ் மீனா ,  உள்துறை செயலாளர் அமுதா, டிஜிபி  சங்கர் ஜிவால் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.

அமைச்சர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். மழைநீர் வடிகால் கட்டுமான பணி, வடிகால்களில் அடைப்புகளை அகற்றும் பணி, நீர்நிலைகள், கால்வாய்கள், அணைக்கட்டுகளின் கதவுகள், கரைகளைக் கண்காணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி அறிவுரைகள் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!