வடகிழக்கு பருவமழை மற்றும் எதிர்வரும் கோடை காலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்குவது குறித்து, சென்னை மற்றும் காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்ட அனைத்து தலைமை பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்களின் ஆய்வுக்கூட்டம் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் இன்று, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகக்


கலையரங்கத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் க. நந்தகுமார், இயக்குநர் (பகிர்மானம்) அ. ரா.மாஸ்கர்னஸ் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.