Skip to content

போக்சோவில் கைதான வடமாநில வாலிபர் தப்பி ஓட்டம்-புதுகையில் பரபரப்பு

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி யில் தனியார் ஹாலோ பிளாக் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தவர் ஒடிஷா மாநிலம் ராமகட்டா மாவட்டத்தைச் சேர்ந்த மகேந்திரா கமங்கா வயது 23,
இவர் அப்பகுதியில் 15வயதுசிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் பெற்றோர் ஆலங்குடி அனைத்து மகளீர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து மகேந்திர கமங்காவைக்கைது செய்து புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். நீதிபதி 15காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து போலீஸார் புதுக்கோட்டை மாவட்ட சிறைச்சாலை க்கு மகேந்திரா கமங்காவை அழைத்து சென்றனர். சிறைச்சாலை வாசல் முன்பு போலீஸாருக்கு டிமிக்கி கொடுத்து மகேந்திரா கமங்கா
தம்பி ஓடிவிட்டான். போலீசார் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

error: Content is protected !!