Skip to content
Home » செவிலியர் தினம்… ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை நடத்திய மாபெரும் பேரணி …

செவிலியர் தினம்… ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை நடத்திய மாபெரும் பேரணி …

“சர்வதேச செவிலியர் தினத்தை” நினைவுகூரும் வகையில், “நமது செவிலியர்கள், நமது எதிர்காலம் – கவனிப்பின் பொருளாதார சகதி, என்ற கருப்பொருளுடன் செவிலியர்கள் இடை விடாத சேவைக்கு நன்றி தெரிவிப்பதற்கும், சுகாதாரத் துறையில் அவர்களின் பணி நிலை குறிக்கவும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மாபெரும் பேரணியை நடத்தியது.

“சர்வதேச செவிலியர் தினம்” மே 12,2024 அன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில், நவீன செவிலியத்துக்கு வழி வகுத்த புளோரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்தநாளில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை அஞ்சலி செலுத்துகிறது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை “நமது செவிலியர்கள், நமது எதிர்காலம் கவனிப்பின் பொருளாதார சக்தி” என்ற கருப்பொருளுடன் மாபெரும் பேரணியை நடத்தியது. இந்நிகழ்ச்சியை கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் கிராந்தி குமார் பதி, ஐ.ஏ.எஸ், திரு. டி. லட்சுமி நாராயணசுவாமி, நிர்வாக அறங்காவலர், எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளை மற்றும் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளை முதன்மை நடவடிக்கை அதிகாரி திருமதி சுவாதி ரோஹித் ஆகியோர் சாலையில் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையைச் சேர்ந்த சுமார் 200 செவிலியர்கள் தாங்களாற்றும் சேவைகள் மற்றும் சுகாதாரத் துறையில் தங்களது பங்களிப்பு குறித்து வாசகங்கள் அமைந்த பதாகைகள் ஏந்திப் பேரணியில் பங்கேற்றனர்.

இதன் மூலம் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை நிர்வாகம் நோயாளிகளைப் பராமரிப்பதில் செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சிகிச்சையின் போது அவர்ளின் குடும்பத்தாரின் மனநிலையறிந்து பக்கபலமாக இருப்பதை அங்கீகரித்தது. அதே நேரத்தில் இளைய தலைமுறையினரை சுகாதாரத்துறையின் எதிர்காலத்திற்காக செவிலியர் பணியைத் தேர்வு செய்யவும் ஊக்குவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!