Skip to content

ரீல்சுக்காக ஆபாச செயல்… இளம்பெண்களால் ஸ்தம்பித்த வாகனங்கள்…

உத்தர பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் கதன்கெடா பகுதியில் தேசிய நெடுஞ்சாலை எண் 30-ல் 2 பெண்கள் இன்ஸ்டாகிராம் ரீல்சுக்காக ஆபாச செயல்களில் ஈடுபட்ட சம்பவம் வைரலாகி வருகிறது.

கான்பூரை சேர்ந்த ரேணு ராஜ்புத் மற்றும் உன்னாவ் நகரை சேர்ந்த நாஜ் கான் என்ற அந்த 2 இளம்பெண்கள் அரைகுறை ஆடையுடன் சாலையில் படுத்து, புரண்டு ஆபாச நடனம் ஆடி ரீல்ஸ் எடுத்தனர். இதனால், அந்த வழியே வாகனங்களில் சென்றவர்கள் நின்று அதனை வேடிக்கை பார்த்தனர். வாகனங்கள் வரிசையாக ஸ்தம்பித்து நின்றன. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விரைவாக சென்ற வாகனங்கள் விபத்தில் சிக்கும் சூழலும் ஏற்பட்டது. உன்னாவ் சதர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நடந்த இந்த செயலை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பான வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. சமீபத்தில் மேஹக் மற்றும் பாரி ஆகிய 2 பெண்கள் சம்பல் மாவட்டத்தில் இதேபோன்ற ஆபாச வீடியோக்களை எடுத்து வெளியிட்டனர். இதனை தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், ரேணு மற்றும் நாஜ் எடுத்த ஆபாச வீடியோக்கள் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!