கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.. கரூரில் நடந்த சம்பவத்தை அரசியலாக பார்க்க விரும்பவில்லை. கரூர் துயர சம்பவம் மிகக்கொடுமையானது. கரூர் சம்பவம் தொடர்பாக விஷமத்தனமான வதந்திகளை பரப்பக்கூடாது.
108 பேர் சிகிச்சைப்பெற்ற நிலையில் தற்போது 7 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். அரசியல் நிகழ்வாக பார்க்கக்கூடாது. கூட்டத்திற்கு ஏற்ப இடத்தை செய்ய வேண்டியது சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியின் பொறுப்பு ஆகும்.
திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்றவர் கூட விஜயை வேடிக்கை பார்க்கச் சென்று இறந்துள்ளார். விஜய் வாகனத்துடன் 2 ஆம்புலன்ஸ்கள் வந்தன.
லைட் ஹவுஸ் கார்னர் கொடுத்திருந்தால், வெறும் 7, 000 பேர் மட்டுமே அங்கு நிற்க முடியும். கூட்டம் அதிகமானதால் ஜெனரேட்டர் தடுப்புகளை உடைத்துக்கொண்டு சென்றனர். கூட்ட நெரிசல் காரணமாக பாதுகாப்புகருதி ஜெனரேட்டரை ஆப் செய்துள்ளனர். தெருவிளக்கை நிறுத்தவில்லை.
கூட்ட நெரிசலுக்கு அடுத்தநாள் வேலுச்சாமிபுரத்தில் ஒரு தண்ணீர் பாட்டில் கூட இல்லையே.குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தவெகதான் செய்திருக்க வேண்டும். காத்திருந்த தொண்டர்களுக்கு குடிநீர் , பிஸ்கட் உள்ளிட்டவை வழங்குவது அரசியல் கட்சிகளின் கடமை. கூட்டத்தில் 2000 செருப்புகள் கிடந்த இடத்தில் ஒரு தண்ணீர் பாட்டிலாவது கிடந்ததா?.. கூட்டத்தில் இருந்தவர்கள் தண்ணீர் கேட்டபோது விஜய் முதலில் அதனை கவனிக்கவில்லை.
மாலை 4 மணிக்கு விஜய் வந்திருந்தால் கூட்ட நெரிசல் ஏற்பட்டிருக்காது. கூட்டத்திற்குள் சென்று ஜெனரேட்டரை வெறு யார் ஆஃபட செய்திருக்க முடியும்?. ஜெனரேட்டர் ஆஃப் செய்யப்பட்டது தொடர்பான நியூஸ் 18 வீடியோ ஔிபரப்பி செந்தில்பாலாஜி விளக்கம். கூட்டம் நடக்கும் இடத்திற்கு அருகில் வந்தபோது விஜய் வாகனத்தின் உள்ளே சென்றது ஏன்.?. கூட்டம் அனைத்தும் வேலுச்சாமிபுரத்திற்கு வர வேண்டுமேன விஜய் உள்ளே சென்றாரா என மக்கள் சந்தேகம். மேற்கொண்டு செல்ல வேண்டும் என காவல்துறை கூறியும் தவெகவினர் கேட்கவில்லை.
பரபரப்புரை இடத்திற்கு 500 மீட்டர் முன்பாகவே பேருந்தில் உள்ளே அமர்ந்து விட்டார் விஜய். விஜயை நோக்கி காலணி வீசப்பட்டது தொடர்பாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்படுகிறது. விஜய் பேச ஆரம்பித்த 6வது நிமிடத்திற்குள் இருமுறை காலணிகள் வீசப்பட்டுள்ளன. 16 வது நிமிடத்தில்தான் என்னை விமர்சித்து விஜய் பேசினார். விஜய் பேச தொடங்குவதற்கு முன்பே அங்கு சூழல் மோசமாகியிருந்தது. விஜயின் கவனத்தை ஈர்க்கவே செருப்பை வீசியிருக்கலாம். தண்ணீர் கேட்டவருக்கு விஜய் தண்ணீர் பாட்டில் கொடுத்தார் விஜய். கூட்ட நெரிசல் தகவல் வந்தபோது கரூரில் கட்சி அலுவலகத்தில்தான் இருந்தேன். கட்சிக்கூட்டத்தில் தொண்டர்கள் குவிந்துள்ளநிலையில் அங்கு அடுத்தவர் எப்படி போக முடியும். திசை திருப்ப முயற்சி. தவறுக்கு தவெக பொறுப்பேற்க வேண்டும். தவறு நடந்தால் எந்த இயக்கமாக இருந்தாலும் முதலில் பொறுப்பேற்க வேண்டும். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை திசை திருப்பி மடைமாற்ற முயன்றால் மக்கள் ஏற்கமாட்டார்கள். பாஜக கூட்டணிக்குழு உண்மையை கண்டறிந்து விசாரணை ஆணையத்திட்டம் சொல்லட்டும். பாஜக உண்மை கண்டறியும் குழு மணிப்பூர், கும்பமேளாவிற்கு சென்றதா?. வேலுசாமிபுரததில் இருந்தது கட்டுகடங்காத கூட்டம் அல்ல… கட்டுப்பாடற்ற கூட்டம் . அரசு கடமையை சரியாக செய்தது. அரசியல் கட்சி செய்யவில்லை. என இவ்வாறு தெரிவித்தார்.