Skip to content

நாட்றம்பள்ளி அருகே லாரி மீது கார் மோதி ஒருவர் பலி..

  • by Authour

சென்னை சூளை பகுதியை சேர்ந்த தேவராஜ் (65 )மற்றும் அவருடைய மகன் நரசிம்மபிரசாத்(32) தேவராஜ் நண்பரான சீனிவாச லோ(55 )ஆகியோர் ஓசூர் அடுத்த மூக்கண்டபள்ளி பகுதியில் உள்ள தேவராஜ்க்கு சொந்தமான இடத்தை பார்ப்பதற்காக சென்னையிலிருந்து ஓசூர் நோக்கி காரில் சென்றுள்ளனர்.

அப்போது திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் டோல்கேட் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் முன்னாள் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் பயணம் செய்த தேவராஜ் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். அவருடைய நண்பரான சீனிவாசலோ படுகாயங்களுடன் நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் தேவராஜனின் மகனான நரசிம்மபிரசாத் சிறுகாயமுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வரைந்து வந்த நாட்றம்பள்ளி போலீசார் இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் முன்னாள் சென்ற கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!