ராணிப்பேட்டையில் ஒருதலைக் காதலால் மாணவிக்கு கத்திக் குத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை, நேத்தப்பாக்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவியை கவியரசு என்பவர் 3 ஆண்டுகளாக ஒருதலை பட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கல்லூரி மாணவி கவியரசுவின் காதலை ஏற்க மறுத்துள்ளார். ஆகையால் ஆத்திரமடைந்த கவியரசு, மாணவியை கொல்ல திட்டமிட்டுள்ளார். காதலிக்க மறுத்த காரணத்தால் கல்லூரிக்கு சென்று திரும்பிய மாணவியை தந்தை கண் முன்னே கவியரசு கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவியை கத்தியால் குத்தி கவியரசுவை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றர்.
ஒருதலைக் காதல்…தந்தை கண்முன்னே மாணவிக்கு கத்திக்குத்து
- by Authour
