Skip to content

தாம்பரம் காவல் ஆணையரகத்தில் ஒரு டன் கஞ்சா அழிப்பு

செங்கல்பட்டு- தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட தாம்பரம், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி, கிளாம்பாக்கம், குன்றத்தூர், சிங்கபெருமாள்கோவில் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் சுமார் 198 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட ஒரு டன் கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி சிங்க பெருமாள்கோவில் அடுத்துள்ள தென்மேல்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்தில், தாம்பரம் கூடுதல் ஆணையர் ஜெயலட்சுமி தலைமையில் துணை ஆணையர் பவன்குமார் ரெட்டி மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு குழுவினர் முன்னிலையில் இந்த கஞ்சா மூட்டைகள் நேற்று நவீன உலைகளில் எரித்து அழிக்கப்பட்டன. இந்த நடவடிக்கையின் போது முக்கிய காவல் அதிகாரிகள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் உடனிருந்தனர்.

error: Content is protected !!