அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இன்று சென்னனை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு விட்டார். ஆனாலும் அவர் தொடர்ந்து அதிமுக என்கிற பெயரையும், சின்னத்தையும் தனது லெட்டர் பேடில் பயன்படுத்துகிறார். தனது வாகனங்களில் அதிமுக கொடியினையும் பயன்படுத்தி வருகிறார். இதனால் தொண்டர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்படுகிறது. எனவே ஓபிஎஸ் அதிமுகவின் பெயர், கொடி மற்றும் சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவினை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம் இது தொடர்பாக நாளை விசாரணை மேற்கொள்கிறது..