என்டிஏ கூட்டணியில் அதிமுக உள்ள நிலையில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை இன்று (டிச.15) முதல் பெறலாம் என அதிமுக தலைமை அறிவித்திருந்தது. இந்நிலையில், அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர்.பா.சரவணன் அதிமுக சார்பில் மதுரை வடக்கு, மதுரை மத்தியம் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனுவை வாங்கியுள்ளார்.

