Skip to content

பாபநாசத்தில் வளர் இளம் பருவத்தினருக்கான நல் வாழ்வு விழிப்புணர்வு பயிற்சி….

வளர் இளம் பருவத்தினருக்கான நல் வாழ்வு விழிப்புணர்வு பயிற்சி நடந்தது. தஞ்சை மாவட்டம், பண்டாரவாடை, சக்கராப் பள்ளி, வீரமாங்குடி, ஆதனூர், கபிஸ்தலம் அரசு ஆரம்பச் சுகாதார நிலையங்களில் நடந்த பயிற்சியில் பதினைந்திலிருந்து பத்தொன்பது வயதிற்குட்பட்டவர்கள் பங்கேற்றனர். ஊராட்சிக்கு 4 பேர் வீதம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 34 ஊராட்சிகளிலிருந்து 136 பேர் தேர்வாகினர். இவர்கள் நண்பர்கள், உறவுகள், தெருவைச் சேர்ந்தவர்களிடம் சுகாதார கல்வி, மனநல கல்வி, பாலியல் கல்வி, சமச்சீர் உணவு குறித்தும், புகையிலை, மதுவை, வன்முறையை தவிர்க்கவும் விழிப்புணர்வு ஏற்புத்துவர். இவர்கள் பாதிக்கப்பட்டவர்களை கபிஸ்தலம் நம்பிக்கை மைய ஆலோசகரிடம் அழைத்து வருவர். இதில் வட்டார மருத்துவ அலுவலர் தீபக், டாக்டர்கள் பண்டார வாடை அழகு சிலம்பரசி, வீரமாங்குடி விஜய் சுரேஷ் கண்ணா, ஆதனூர் ஸ்வர்ண லதா, சக்கராப்பள்ளி மோனிஷா உட்பட செவிலியர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!