கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் உள்ள மிராஜ் திரையரங்கில் படையப்பா திரைப்படம் ரீ ரீலீஸ் செய்யப்பட்டிருந்த நிலையில் , ஆடியோ தெளிவாக இல்லாததால் திரையரங்க ஊழியர்களுடன் ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த படையப்பா திரைப்படம் அவரது பிறந்த நாளை முன்னிட்டு இன்று ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. கோவை நகரில் பல்வேறு திரையரங்குகளில் இந்த படம் திரையிடப்பட்டுள்ள நிலையில், ரஜினி ரசிகர்கள் ஆர்வத்துடன் படத்தை கண்டு ரசித்தனர். குறிப்பாக கோவை ஒண்டிபுதூர் பகுதியில் உள்ள மிராஜ் திரையரங்கில் படையப்பா திரைப்படம் இன்று திரையிடப்பட்டுள்ளது. இந்த படத்தை காண ஏராளமான ரசிகர்கள் டிக்கெட் எடுத்து வந்திருந்த நிலையில் , மாலை நேர காட்சியில் அடுத்தடுத்து ஆடியோ பிரச்சனை, வீடுயோ பிரச்சினை காரணமாகவும் தொடர்ந்து திரையிட முடியாத சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து திரையரங்கிற்கு ஆர்வத்துடன் வந்திருந்த பொதுமக்கள் திரையரங்க ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முழுமையாக திரைப்படம் ஒளிபரப்ப படாத நிலையில், பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் எனவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை சமரசபடுத்திய திரையரங்கஉ ஊழியர்கள் பணத்தை திருப்பி கொடுப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து, ரசிகர்கள் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர்..

