Skip to content

துபாயில் இன்று பாகிஸ்தான் – ஓமன் அணிகள் மோதல்

துபாய் ஆசிய கோப்பை 2025 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) செப்டம்பர் 9 முதல் 28 வரை நடைபெறுகிறது. இன்று (செப்டம்பர் 12) நடைபெறும் 4வது போட்டியில் குரூப் A-வில் பாகிஸ்தான் மற்றும் ஓமன்அணிகள் துபாய் இன்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மோதுகின்றன.

இந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஓமன் அணிகள் மோதும் முதல் போட்டி இதுவாகும். இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி குரூப் ஏ-யில் புள்ளிகள் பட்டியலில் முதல் 2 இடங்களை எட்டும். பாகிஸ்தான் மற்றும் ஓமன் அணிகள் டி20 கிரிக்கெட்டில் இதுவரை நேருக்கு நேர் மோதவில்லை. முதல் முறையாக, ஓமன் மற்றும் பாகிஸ்தான் அணிகள் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் மோதுகின்றன.

பாகிஸ்தான் அணி ஒமனை விட மிகவும் சிறப்பாக உள்ளது, ஆனால் பாகிஸ்தானின் சமீபத்திய ஃபார்ம் அவ்வளவு சிறப்பாக இல்லை. பாகிஸ்தான் அணி அதன் வலுவான பந்துவீச்சு மற்றும் பவர்-ஹிட்டர் பேட்ஸ்மேன்களை நம்பியிருக்கும். மறுபுறம், ஓமன் இந்த போட்டியில் வெற்றி பெற முயற்சிக்கும்.

பாகிஸ்தான்.. சல்மான் ஆகா (கேப்டன்), ஃபகார் ஜமான், சைம் அயூப், சாஹிப்சாதா ஃபஹரன், ஹசன் நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், அப்ரார் அகமது, முகமது நவாஸ், ஷஹீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப், ஹசன் அலி.

ஓமன்… ஜதீந்தர் சிங் (கேப்டன்), அமீர் கலீம், ஹம்மத் மிர்சா, முகமது நதீம், ஆஷிஷ் ஒடேடரா, விநாயக் சுக்லா, ஆர்யன் பிஷ்ட், சுஃப்யான் மஹ்மூத், சமய் ஸ்ரீவஸ்தவா, ஷகீல் அகமது,

error: Content is protected !!