Skip to content

பாலக்கரை: சிவாஜி சிலை அகற்றம்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், திருச்சி சங்கிலியாண்டபுரம்
பகுதியில் இருந்த நாடகக் குழுவில் சேர்ந்து மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.
சிவாஜி 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சிவாஜி கடந்த 2001 ம் ஆண்டு ஜூலை மாதம் 21 ம் தேதி காலமானார்.
அவரது மறைவுக்குப் பிறகு திருச்சி பாலக்கரை ரவுண்டானாவில் கடந்த 14 வருடங்களுக்கு முன்பு அவரது 9 அடி முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட்டது.
பல்வேறு காரணங்களால் அவரது சிலை திறக்கப்படாமலேயே இருந்தது.

இந்த நிலையில் சிவாஜி கணேசன் சிலை  வார்னர்ஸ் சாலை  ரவுண்டானாவில்(சோனாமீனா எதிரில்)  நிறுவப்பட்டு மே ஒன்பதாம் தேதி முதல்வர் ஸ்டாலினால்  திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்த சூழலில் திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் சிவாஜி சிலையை எவ்வித சேதமும் இன்றி அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.கிரேன் உதவியுடன்10 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சிலை சிலையை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

error: Content is protected !!