திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, சீனிவாசநல்லூர் பகுதியை சேர்ந்த பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி சென்று கொண்டிருந்தனர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வீரராக்கியம் தனியார் பாலிமர் கம்பெனி அருகே நடந்து செல்லும்போது பின்னால் வந்த மினி சரக்கு வேன் பக்தர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். இதில் மேலசீனிவாசநல்லூரை சேர்ந்த சுந்தரம்(55) என்பவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இவரது உடல் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த சீனிவாசன் நல்லூர் பகுதியை சேர்ந்தவர் ரவி என்பவரின் மகன் தர்மேந்திரா(27), சுப்ரமணியன் என்பவரின் மகன் சித்திரகுமாரன்-(13), செல்வம்-(45) ஆகிய மூவரும் கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து ஏற்படுத்திய வேன் டிரைவர் தலைமறைவாகிவிட்டார் என கூறப்படுகிறது. சம்பவம் குறித்து மாயனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பழனி யாத்திரை கூட்டத்தில் புகுந்த மினி லாரி.. திருச்சி பக்தர் பலி..
- by Authour

