வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க குறைந்தது 200 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் பேசினார்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் ஒன்றிய தி.மு.க. அலுவலகம் மற்றும் பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் திருவள்ளுவர் சிலையை திமுக இளைஞர் அணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். அப்போது

போக்குவரத்துத் துறை மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, முந்திரி மாலை அணிவித்து, வெள்ளி செங்கோலை வழங்கினார்.
இதனையடுத்து அமைச்சர் சிவசங்கரின் தந்தையும், முன்னால் எம்.பி.யுமான சிவசுப் பிரமணியனின் சொந்த ஊரான தேவனூரில் அவரது நினைவாக அமைக்கப்பட் டுள்ள நூலகம், கணினி பயிற்சி மையம் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ஆண்டிமடம் நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், ஒன்றிய பா.ஜனதா அரசு தமிழகத்திற்கு எந்த நன் மையையும், திட்டத்தையும் கொடுப்பதில்லை. நாம் கேட்கிற நிதியையும் கொடுப்ப தில்லை. ஆனால் நாம் கொண்டு வருகிற எல்லா திட் டத்திற்கும் ஏதாவது தொந்தரவை மத்திய அரசு கொடுக் கிறது. கல்வி நிதியான ரூ.3,800 கோடி தரவில்லை.
குடிநீர் திட்டத்திற்கானயும் தரவில்லை. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை யும் தடுத்து நிறுத்துவதற்கான முயற்சியில் மத்திய பா.ஜனதா அரசு இறங்கியுள்ளது. இன்று பா.ஜனதா அரசு

சுரண்டப்ப டுகின்ற வஞ்சிக்கப்படுகின்ற மாநிலமாக தமிழகம் உள்ளது. இதற்கு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி துணை போகின்றார். இன்று பா.ஜனதாவோடு அ.தி.மு.க. ஒன்றோடு ஒன்றாக கலந்து போய்விட்டது. வருகிற சட்ட மன்றத் தேர்தலுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி, அ. தி.மு.க.வை பா.ஜனதாவோடு இணைத்துவிடு விடுவார். ஏனென்றால் அவருக்கு அதை விட் டால் வேறு வழி இல்லை.
எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக ஆக்குகின்ற எண்ணம்
அமித்ஷாவிற்கு நிச்சயமாக கிடையாது. நமது திராவிடமாடல் அரசின் சாத னைகளை மக்களிடம் எடுத்து போய் சேருங்கள். தமிழகத் திற்கு வருகின்ற ஆபத்துகளை மக்களிடம் விளக்கமாக எடுத்துக் கூறுங்கள். வருகிற சட்ட மன்ற தேர்தலில் குறைந்தது 200 தொகுதிகளில் நிச்சயம் வென்று காட்ட

வேண்டும். அதற்கு அரியலூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய அரியலூர், ஜெயங்கொண்டம் தொகுதி, அதற்கான ஒரு தொடக்கப் புள்ளியாக நிச்சயம் அமையும். இந்த நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
நிகழ்ச்சிகள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, ஜெயங்கொண்டம் எம் எல் ஏ க.சொ.க.கண்ணன், தி.மு.க. சட்ட திருத்தக் குழு உறுப்பினர் சுபா.சந்திர சேகரன், ஆண்டிமடம் ஒன் றிய தி.மு.க. செயலாளர்கள் தெற்கு கலியபெருமாள், மேற்கு செந்தில்குமார், ஜெயங் கொண்டம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும். ஆண்டிமடம் ஒன்றிய கிழக்கு பெ பொறுப்பாளருமான பிரபாகரன் உள்பட மாநில, மாவட்ட, நகர,நிர்வாகிகள், தொண்டர் கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

