NDA Circus Ringmaster BJP. டெல்லி கட்டளைக்குப் பணிந்து வித்தை காட்டும் பழனிசாமி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், ““தேர்தல் முடிந்ததும் கொள்கையற்ற சந்தர்ப்பவாத NDA கூட்டணியில் இருந்து எல்லோரும் சிதறிவிடுவோம்“ எனத் தங்களின் தோல்வியை முன்பாகவே கணித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள்! இப்படி அடிக்கடி செய்த அனுபவம் கொண்டவரென்பதால் இதில் அவரை நம்பலாம். மேற்கு மண்டலத்துக்கு நமது #DravidianModel அரசு செய்து தந்திருக்கும் சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்போம்! மேற்கு மண்டலத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்ற Flash News-ஐத்தான் தேர்தல் முடிவு வெளிவரும் நாளில் உங்களிடம் நான் எதிர்பார்க்கிறேன்.
கொள்கையால் இணைந்து பயணிக்கும் நம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வலிமையடைந்துகொண்டே போகிறது. பாசிச பா.ஜ.க.வை எதிர்கொள்ளும் துணிச்சல் கொண்ட கட்சியாக இந்திய அளவில் நமக்குள்ள stature உயர்கிறது!அடிமைகள், ஆதிக்கவாதிகள், அவர்களின் ஏவல் அமைப்புகள் என எத்தனை பேர் வந்தாலும், தமிழ்நாட்டு மக்களின் பேராதரவோடு #வெல்வோம்_ஒன்றாக!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

