Skip to content

பண்ரூட்டி: வீட்டில் சேமித்த பெட்ரோல் தீப்பிடித்து ஒரே குடும்பத்தில் 3 பேருக்குக் காயம்

பண்ரூட்டி அருகே பெட்ரோல் தீப்பிடித்து எரிந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டது. பெட்ரோல் தட்டுப்பாடு அச்சத்தில் ஆறுமுகம் என்பவர் 10 லிட்டர் பெட்ரோலை கேனில் வாங்கி தனது வீட்டில் வைத்துள்ளார். பெட்ரோலை கேனில் இருந்து சிறிய பாட்டிலில் மாற்றும்போது அருகில் இருந்த விளக்கு பட்டு தீப்பிடித்துள்ளது. தீ பரவியதில் ஆறுமுகம் (70), அவரது மனைவி தேவகி (65), மகன் தணிகாசலம் (47) காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!