Skip to content

கும்பகோணம் ஜிஎச்-ல் லிப்ட் இயங்காததால் நோயாளிகள் கடும் அவதி

  • by Authour

கும்பகோணம் ஜிஎச்-ல் லிப்ட் இயங்காததால் நோயாளிகள் கடும் அவதிகும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு ஜெயங்கொண்டம் T.பலூர் அணைக்கரை வலங்கைமான் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் 1000-க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாக வந்து செல்கின்றனர். 800-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக உள்ளனர். இந்த நிலையில்  ஆஸ்பத்திரியில் உள்ள பிரசவ வார்டுகள் தரைத்தளம் முதல் 5-ம் தளம் வரை 6 தளங்களிலும் உள்ளன.

கர்ப்பிணிகள், மருத்துவர்கள் பணியாளர்கள் சென்று வர 2 லிப்ட்கள் உள்ளன. இந்த 2 லிப்ட்டுகளும் கடந்த சில தினங்களாக அடிக்கடி பழுதடைந்து மருத்துவமனைக்கு வருபவர்கள் நோயாளிகள் சிறுவர்கள் என இந்த லிப்டில்

மாட்டிக் கொள்வதும் பின்னர் அவர்கள் மீட்கப்படுவதும் தொடர்கதையாக உள்ளது. இந்த நிலையில் இன்றும் அதே போல் லிப்டில் பழுது ஏற்பட்டு ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கும் நபர் அதில் மாட்டிக் கொண்டு பின்னர் அதிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இதனால் மருத்துவமனைக்கு வரும் கர்ப்பிணிகள்,மற்றும் பொதுமக்கள் மேல் தளத்திற்கு செல்ல படி ஏறி செல்வதால் மிகவும் சிரமம் அடைந்து வருகிறனர். எனவே மருத்துவமனை நிர்வாகத்தினர் பிரசவ வார்டில் உள்ள லிப்டை சீரமைக்க வேண்டும். லிப்டை இயக்குவதற்கு ஆப்பரேட்டர்களை நியமித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.

error: Content is protected !!