கரூரில் வ.உ.சி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மார்பளவு சிலைக்கு மாலை அணிவித்து கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டம் – வெண்கல சிலை அமைக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை.
கப்பலோட்டிய தமிழர் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 154-வது பிறந்த நாளை முன்னிட்டு கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாந்தோன்றிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்புறம் அமைந்துள்ள அவரது மார்பளவு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் கரூர் மாவட்ட வ.உ.சி பேரவை, சோழிய வெள்ளாளர் சமூக நலச் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு உறுதி மொழி எடுத்துக் கொண்டதுடன், கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். கரூரில் வ.உ.சி வெண்கல சிலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை \
வைத்தனர். மேலும், வ.உ.சி பேரவை சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு 6 தீர்மானங்களை நிறைவேற்றினர்:
அதில் தமிழக அரசு
வ.உ.சிதம்பரம் பிள்ளை பிறந்த தினத்தை அரசு விழாவாகவும், வழக்கறிஞர் தினமாகவும் அறிவிக்க வேண்டும், தமிழக சட்டப்பேரவையில் திருவுருவப்படத்தை திறந்து வைத்து சிறப்பு செய்து விட வேண்டும், நாடாளுமன்ற வளாகத்தில் வ.உ. சிதம்பரனார் பிள்ளை திருவுருவ சிலை நிறுவ வேண்டும், உட்பிரிவு ஒன்று சேர்த்து வெள்ளாளர் என்ற பெயரில் வருகின்ற ஜாதிவாரி கணக்கெடுப்பில் பதிவு செய்ய வேண்டும், கிருஷ்ணராயபுரம் தனித் தொகுதியை பொதுத் தொகுதியாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றினார்