Skip to content

சொந்த வாகனங்களை விதிகளை மீறி வாடகைக்கு இயக்கினால் அபராதம்

  • by Authour

சொந்த பயன்பாட்டு வாகனங்களை விதிகளை மீறி வாடகைக்கு இயக்கினால் அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு வாடகைக்காக சொந்த பயன்பாடு வாகனங்களை செயலி மூலமாக வாடகைக்கு விடுவதாக குற்றசாட்டு எழுந்ததன் அடிப்படையில் டாக்ஸி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் தன் முயற்சியாக வாகனங்களை சிறைபிடித்து கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் வாகனத்தை ஒப்படைத்தனர். அதன் விளைவாக, தமிழகம் முழுவதும் சொந்த பயன்பாடு வாகனங்களை வணிக நோக்கத்திற்காக பயன்படுத்த கூடிய பணிகள் அதிகரித்துள்ளது. தனியார் செயலிகள் மூலமாகவும் , இன்ஸ்டாகிராம் மூலமாகவும் இத்தகைய பயன்பாடு அதிகரித்துள்ள சுழலில் அதனை கட்டுப்படுத்தும் வகையில் போக்குவரத்துதுறை உத்தரவை வழங்கியுள்ளது. தீபாவளிக்கு சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக வணிக உரிமம் இல்லாத வாடகை கார் பயன்பாடு அதிகரித்துள்ளது.

எனவே வீதிகளை மீறி வெள்ளைநிற பதிவெண் கொண்ட வாகனங்கள் வாடகைக்கு விடப்பட்டாலோ அல்லது பயணிகளை கட்டண அடிப்படையில் ஏற்றி செல்ல முயற்சித்தாலோ கடுமையான நடவடிக்கை என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சட்டத்துக்கு புறம்பாக வாடகைக்கு விடக்கூடிய இந்த வகை வாகனங்களை கண்காணித்து உரிய துறை சார்ந்த நடவடிக்கைகளை எடுக்க போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. சம்மந்தப்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு முறைகேடாக இயங்கக்கூடிய வாகனங்களை கண்டறிந்து அபராதம் விதிக்கவும் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

பயணிகளை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு FC இதர வரிகள் உட்பட ஆயிரக்கணக்கில் வரிசெலுத்த வேண்டிய தேவை என்பது உள்ளது. வணிக பயன்பாடாக இருக்கக்கூடிய வாகனங்களுக்கு சட்டத்திற்கு புறம்பாக இயக்கப்படும் வெள்ளைநிற பதிவெண் கொண்ட வாகனங்களால் அரசுக்கு கடுமையான வருவாய் இழப்பு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே விதிகளை மீறி இயங்கக்கூடிய வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத்துறை சம்மந்தப்பட்ட மண்டல இயக்குநர்களுக்கு உத்தரவு பிறப்பித்தது. விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்களுக்கு அதிகப்படியாக ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் சமூக வலைத்தளங்கள் மற்றும் தனியார் செயலியில் கவர்ச்சிகரமாக அறிவிப்புகளை வெளியிட கூடிய நபர்கள் மீது நடடிக்கை எடுக்கவும், கண்காணிக்கவும் போக்குவரத்துதுறை தரப்பில் உத்தரவிடப்பட்டது.

error: Content is protected !!