Skip to content

சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் மக்கள்: 3 நாட்களில் 3.58 லட்சம் பேர் பஸ்களில் பயணம்

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடச் சென்னையில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். ரயில் டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே தீர்ந்துவிட்ட நிலையில், மக்களின் வசதிக்காகத் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்த்து, இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மொத்தம் 38,175 சிறப்புப் பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ரயில் டிக்கெட் கிடைக்காத பயணிகளுக்கு இந்த அரசுப் பேருந்துகள் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!