திருச்சி கிராப்பட்டி பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 34) இவரது மனைவிக்கு எடமலைப்பட்டி புதூர் பிள்ளையார் கோவில் தெரு ஆர் எம் எஸ் காலனிய சேர்ந்த வெங்கட் (வயது 33) என்பவருக்கிடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக தெரிய வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று திருநாவுக்கரசு அவரது மைத்துனர் மற்றொரு திருநாவுக்கரசு (வயது 29)ஆகிய இருவரும் சேர்ந்து வெங்கட் வீட்டுக்கு சென்று அவரிடம் சத்தம் போட்டு உள்ளனர். இந்நிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வெங்கட் திடீரென்று அரிவாளை எடுத்து இரண்டு திருநாவுக்கரசையும் லேசாக வெட்டி காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த இரண்டு திருநாவுக்கரசுவும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து திருநாவுக்கரசு எடமலைப்பட்டிப் புதூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.