சத்திரம் பேருந்து நிலையத்தில் இருக்கும் அரியலூர் பெரம்பலூர் பேருந்துகளை மத்திய பேருந்து நிலையத்திற்கு மாற்றுங்கள்? பிளீஸ்…
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து அரியலூர் பெரம்பலூர் ஜெயங்கொண்டம் ஆகிய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அங்கிருந்து புறப்படுகின்றன பேருந்துகள் அனைத்தும் அவர்களது நேரத்திற்கு முன்பாகவே அங்கு வந்து நிறுத்துவதன் காரணமாக சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் லால்குடி மண்ணச்சநல்லூர் சமயபுரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் அஸ்வின் ஸ்வீட்ஸ் கடை அருகே திரும்ப முடியாமல் சிரமப்படுகின்றனர். இதன்

காரணமாக அங்கிருந்து கலைஞர் அறிவாலயம் கரூர் பைபாஸ் சாலை மெகா ஸ்டார் திரையரங்கு வரை வாகனங்கள் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதனால் வாகன ஓட்டிகள் மிகப்பெரும் மன உளைச்சல் ஏற்படுகின்றன..
மேலும் ஆம்புலன்ஸ்கள் சிக்கி தவிக்கின்றன .ஆகையால் மாவட்ட ஆட்சியர் போக்குவரத்து துறை

அலுவலர்கள் பொதுமக்களின் நலன் கருதி தயவு செய்து சத்திரம் பேருந்து நிலையத்தில் இருக்கும் அரியலூர் பெரம்பலூர் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை மத்திய பேருந்து நிலையத்திற்கு மாற்றும்படி பொதுமக்கள் தாழ்மையாக கேட்டுக் கொண்டுள்ளனர்.

