இன்று தவெக தலைவரும் நடிகருமான விஜய், கொடைக்கானலுக்கு ‘ ஜனநாயகன்’ பட ஷூட்டிங் வேலைக்காக சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் வரவுள்ளார். விஜய் வருகிறார் என்ற தகவல் தெரிந்தவுடன் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் ஒன்றாக கூடி விஜயை பார்க்க காத்திருந்தார்கள். கூட்டம் அப்போதே அதிகமான அளவுக்கு கூடிய காரணத்தால் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வேலைகளில் போலீசார் ஈடுபட்டனர்.
இப்படியான சூழலில், சென்னை விமான நிலையத்தில் தவெக தலைவர் விஜய் செய்தியாளர்களிடம் பேசி முக்கியமான வேண்டுகோளையும் வைத்தார். அது என்னவென்றால், ” என் வாகனத்தை பின்தொடர்ந்து அதிவேகமாக யாரும் வர வேண்டாம். ஹெல்மெட் அணியாமல், பைக் மீது ஏறி யாரும் பின் தொடர வேண்டாம்.வேறு ஒரு சந்திப்பில் நான் உங்களை சந்திக்கிறேன். ப்ளீஸ் பின் தொடர வேண்டாம் எனக்கு பதட்டமாக இருக்கிறது” என பேசியிருந்தார்.
அதற்கு முன்னதாக கோவைக்கு த.வெ.க தலைவர் விஜய் வந்தபோது தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்து அவருடைய வாகனத்தை பின் தொடர்ந்து வந்தார்கள். நம்முடைய இளைய தோழர்கள், நமது வாகனங்களை இரு சக்கர வாகனங்களில் தலைக் கவசமின்றி வேகமாகப் பின்தொடருவது, பாதுகாப்புக் குழுவினரை மீறி வாகனத்தின் மீது ஏறுவது, குதிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டது எனக்கு மிகவும் கவலையை அளித்தன இனிமேல் அப்படி செய்யாதீர்கள்” என்பது போல அட்வைஸ் கொடுத்து இருந்தார்.
அப்படியான அறிவுரைகளை வழங்கியும் த.வெ.க தொண்டர்கள் சொல்பேச்சை கேட்காமல் மீண்டும் அதே போல வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். ஜனநாயகன் படப்பிடிப்பிற்கு செல்வதற்காக மதுரை விமான நிலையம் விஜய் வந்தடைந்த நிலையில், கூட்டம் அலைமோதியது. பூக்களை தூவி விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பும் அளித்தனர். இதனை கண்ட விஜய் கேரவன் மீது கை அசைத்ததும் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் விமான நிலையமே சம்பித்து போனது.
அப்படியான வரவேற்பை கொடுத்தாலும் ஒரு சில தொண்டர்கள் கேரவன் மீது மேல் ஏறி விஜய்க்கு கையை கொடுக்க முயற்சி செய்தார்கள். உடனே மேலே இருந்த பவுன்சர்கள் மேலே ஏறியவர்கள்ளை கீழே இறங்க கூறினார்கள். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.