பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கும் இந்த தேர்வு வருகிற 22-ந்தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளில் தமிழ் பாடத்துக்கான தேர்வு நடக்க இருக்கிறது. இந்த தேர்வை தமிழ்நாடு, புதுச்சேரியில் இருந்து 7 ஆயிரத்து 534 பள்ளிகளை சேர்ந்த 3 லட்சத்து 58 ஆயிரத்து 201 மாணவர்கள், 4 லட்சத்து 13 ஆயிரத்து 998 மாணவிகள், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 7 லட்சத்து
72 ஆயிரத்து 200 பேர் எழுத உள்ளனர். இதுதவிர தனித்தேர்வர்கள் 21 ஆயிரத்து 875 பேரும், சிறைவாசிகள் 125 பேரும் எழுதுகிறார்கள். பிளஸ் 2 தேர்வை பொறுத்தவரையில் 3 ஆயிரத்து 302 தேர்வு மையங்களில் நடத்தப்பட உள்ளது. தேர்வு மையங்களில் காப்பி அடித்தல், விடைத்தாள்களை மாற்றுதல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுபவர்களை பிடிக்க 3 ஆயிரத்து 200 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், 43 ஆயிரத்து 200 தேர்வறை கண்காணிப்பாளர்கள் தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இந்நிலையில் திருச்சியில் +2 மாணவர்கள் பொதுத்தேர்வை எழுதி வருகின்றனர் .