தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் பிளஸ்2 தேர்வு நடந்தது. சுமார் 8 லட்சத்து 21 ஆயிரம் பேர் இந்த தேர்வினை எழுதினர். இதில் அரியலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 98.82 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஈரோடு இரண்டாம் இடம்(97.98%), திருப்பூர்(97.53%), 3ம் இடமும், கோவை (97.48) 4ம் இடமும், கன்னியாகுமரி(97.01%)5ம் இடமும் பிடித்துள்ளது.
பிளஸ்2 துணைத்தேர்வுகளுக்கு வரும்1 6ம் தேதி முதல் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஜூன் 25ம் தேதி முதல் துணைத்தேர்வுகள் நடைபெறும். கணினி அறிவியல் பாடத்தில் அதிகபட்சமாக சதம் எடுத்து உள்ளனர். தமிழ்பாடத்தில் 99.15 % பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இயற்பியலில் 99.22 % பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். தமிழில் 135 பேரும், கணிதத்தில் 3022 பேரும் இஅயற்பியலில் 1125 பேரும் சதம் எடுத்து உள்ளனர்.
தேர்வு எழுதிய மாணவர்கள் 7 லட்சத்து 92 ஆயிரத்து 494 பேர். இதில் 4 லட்சத்து 05 ஆயிரத்து 472 மாணவிகளும், 3 லட்சத்து 47 ஆயிரத்து 670 மாணவிகளும் தேர்ச்சி பெற்று உள்ளனர். இந்த ஆண்டும் மாணவிகளே அதிக தேர்ச்சி பெற்று உள்ளனர். ஆங்கிலத்தில் ஒருவர் கூட 100க்கு 100 எடுக்கவில்லை. பிளஸ் 2 தேர்வில் 95.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 0.47% பேர் கூடுதலாக தோச்சி பெற்றுள்ளனர்.
இந்த தகவலை சென்னையில் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.