இந்தியாவும், பாகிஸ்தானும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் எல்லை மாநிலங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் பலத்த சேதமடைந்துள்ள நிலையில், பாகிஸ்தான் போரை நிறுத்தும்படி இந்தியாவிடம் கெஞ்சுகிறது. இன்னொருபுரம் இ,ந்திய எல்லைகளில் தொடர்ந்து தாக்குதலும் நடத்தி வருகிறது.
அதே நேரத்தில் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்பதில் பிரதமேர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் உறுதியுடன் உள்ளனர். இன்று காலை பிரதமர் மோடி டில்லியில் உள்ள தனது இல்லத்தில், முப்படை தளபதிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
மேலும் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் பாதுகாப்புப் படைத் தலைவர் அனில் சவுகான், பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் ஆகியோரும் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு வந்து இந்த ஆலோசனையில் பங்கேற்றனர். எல்லைகளில் போர் பதற்றம் அதிகரித்துள்ளநிலையில், முப்படை தளபதிகளுடன் பிரதமரின் இந்த ஆலோசனை கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. எனவே போர் மேலும் தீவிரமடையும் என கூறப்படுகிறது.