2024 மக்களவை தேர்தல் பிரசாரத்திற்காக பிரதமர் மோடி தமிழகத்திற்க 9 முறை வந்து பிரசாரம் செய்தார். இந்த நிலையில் வரும் 2026ல் தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்காக கடந்த 26ம் தேதி தூத்துக்குடியிலும், 27ம் தேதி அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்திலும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். அடுத்ததாக வரும் ஆகஸ்ட் 26ம் தேதியும் மோடி தமிழகம் வருகிறார். அன்று காலை கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் இருந்து மனதில் குரல் நிகழ்ச்சியை நடத்துகிறார். பின்னர் அங்கிருந்து திருவண்ணாமலை சென்று கோவிலில் வழிபடுகிறார். அங்கும் ரோடு ஷோ நடத்த திட்டமிட்டு உள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலிலும் 10 முறையாவது பிரசாரம் செய்ய பிரதமர் மோடி முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. எனவே இனி அவர் மாதந்தோறும் தமிழ்நாடு வருவார் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.