சென்னை , கிரீன்வேஸ் சாலையில் எடப்பாடி பழனிசாமி பாமக அன்புமணி இருவரும் சந்தித்துள்ளனர். அதிமுக கூட்டணியில் பாமக இணைந்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி

அன்புமணிக்கு சால்வை அணிவித்து மகிழ்ச்சியுடன் வரவேற்றார். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி கூறியதாவது…
இரு கட்சியினரும் விரும்பி இந்த கூட்டணியை அமைத்துள்ளோம் . இந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும்.
பாமகவிற்கான தொகுதிப் பங்கீட்டை முடிவு செய்துவிட்டோம். மேலும் சில கட்சிகள் இணையும்.
தேர்தல் வெற்றிக்கு அதிமுக-பாஜக , பாமக இணைந்து செயல்படும்.
ஏற்கனவே உள்ள பாஜக-அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்துள்ளது.
பாமகவிற்கு எத்தனை தொகுதிகள் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்று இவ்வாறு தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து அன்புமணி கூறியதாவது…
அதிமுக கூட்டணியில் இணைந்தது மகிழ்ச்சியான தருணம்.
பாமக தொண்டர்கள் எதிர்பார்த்த கூட்டணியில் இணைந்துள்ளோம்.
சமூக நீதிக்கு எதிரான திமுக அரசை அகற்றவே அதிமுக உடன் கூட்டணி. கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெற்று அதிமுக ஆட்சி அமைக்கும். என்று இவ்வாறு தெரிவித்தார்.
ஏற்கனவே டில்லி சென்று பாஜக தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி. திருச்சியில் அமித்ஷாவை சந்தித்த நிலையில் நேற்று டில்லி சென்றார். எஸ்.பி.வேலுமணி. இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பாமக கூட்டணியை உறுதி செய்து இன்று டில்லி செல்கிறார்.

