பா.ம.க.,வில் நிறுவனர் ராமதாசுக்கும், தலைவர் அன்புமணிக்கும் இடையே நடந்து வரும் மோதல் உச்சக்கட்டத்திற்கு சென்றுவிட்டது. கட்சி நிர்வாகிகளை மாற்றம் செய்து ராமதாஸ் அறிவித்து வருகிறார். ஏற்கனவே பல்வேறு மாவட்ட கட்சி நிர்வாகிகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.இந்நிலையில் இன்று (ஜூன் 15) பா.ம.க., பொதுச்செயலாளராக இருந்த வடிவேல் ராவணன் நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். புதிய பொதுச்செயலாளராக முரளி சங்கரை பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார். சில நாட்களுக்கு முன், ‘எங்கள் கட்சி பொதுச்செயலாளரை காணவில்லை. கண்டுபிடித்து தருபவர்களுக்கு 100 ரூபாய் சன்மானம் வழங்கப்படும்’ என்று ராமதாஸ் கூறியிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பா.ம.க., பொதுச்செயலாளர் நீக்கம்… ராமதாஸ் அறிவிப்பு
- by Authour
