Skip to content

பண்ருட்டியில் மகன், மகளைக் கொலை செய்து தந்தை தற்கொலை

தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். மகன் மற்றும் மகளுடன் ராஜா வசித்து வந்த நிலையில் குடும்பம் நடத்த வருவதற்கு மனைவி மறுத்ததாக கூறபடுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ராஜா இன்று தனது மகன் குமரகுரு (12) மற்றும் மகள் தன்யாஶ்ரீ(7)ஆகியோர் உடன் ஒரே கயிற்றில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நண்பர்களுக்கு செல்ஃபி புகைப்படத்துடன் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக வாட்ஸ்அப் மெசேஜ் அனுப்பி விட்டு அவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் நண்பர்கள் போலீசார் துணையுடன் வீட்டில் சென்று மூவரின் உடலையும் மீட்டனர்.
ராஜா தனது இரண்டு குழந்தைகளை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டாரா அல்லது அவர்கள் தற்கொலை செய்ய வலியுறுத்தினாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதுடன் ராஜாவின் மனைவியிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தில் மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பண்ருட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!