Skip to content

கரூரில் 36 ரோந்து வாகனத்தில் போலீசார் விழிப்புணர்வு பேரணி

கரூர் மாவட்ட காவல் துறை சார்பில் 36 ரோந்து வாகனத்தை பொதுமக்கள் நட்புறவை வலுப்படுத்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்.

கரூர் மாவட்ட காவல்துறை மற்றும் பொதுமக்கள் இடையே நல்லிணக்கத்தையும் நட்புறவையும் மேம்படுத்தும் நோக்கில், இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரன் பிரசாத் இன்று தொடங்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு பேரணியில் சுமார் 36 இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து

காவல்துறையினர் பங்கேற்று, பொதுமக்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு, பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.

மூன்று காவல் கோட்டங்களுக்கும் தலா 12 ரோந்து வாகனங்கள் என மொத்தம் 36 வாகனங்களில்

மொத்தம் 72 காவலர்கள் இந்த ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

பேரணி கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி, மாவட்ட ஆட்சியர் வளாகம், கரூர் அரசு கலைக்கல்லூரி, சுங்க கேட், லைட் கார்னர், உழவர் சந்தை, மனோகரன் கார்னர், ஜவஹர் பஜார் உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வழியாக சென்று, இறுதியில் கரூர் நகர காவல் நிலையத்தில் நிறைவடைந்தது.

இந்த முயற்சி மூலம் காவல்துறை மற்றும் பொதுமக்கள் இடையே நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பை அதிகரிக்கும் முயற்சியாகவும், தேர்தல் காலத்தில் எந்த அசம்பாவிதங்களும் ஏற்படாதவாறு பாதுகாப்பு பணிகளை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையாக இந்த திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!