சென்னை, ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கீவளூர் பகுதியைச் சேர்ந்தவர் சகா(என்ற) சீனிவாசன் இவர் பிரபல ரவுடியான எபி(என்ற)எபினேசர் கொலை வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றவர் சரித்திர பதிவேடு குற்றவாளியுமான இவர் ஏ ப்ளஸ் ரவுடியுமாக இருந்து வருகிறார். அந்த வழக்கிலிருந்து வெளியே வந்தவர் ஸ்ரீபெரும்புதூர் போலீசார் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். அந்த வழக்கில் ஜாமீன் கிடைத்த நிலையில் இன்று காலை வேலூர் சிறையில் இருந்து வெளியே வந்த உடனே அங்கு வந்த போலீசார் சகாவை கைது செய்து அழைத்துச் சென்றதாகவும் மேலும் அவரது குடும்பத்தினர் கேட்டபோது வேறொரு வழக்கில் கைது செய்வதாக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் மற்றும் திருவள்ளூர் போலீஸ் நிலையத்தில் கேட்டபோது சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையிலிருந்து யாரும் வந்து சகாவை அழைத்துச் செல்லவில்லை என தெரிவித்தனர் எனவே தனது மகனை அழைத்துச் சென்ற போலீசார் யார் எங்கு வைத்து விசாரணை நடக்கிறது என்று தெரியவில்லை எனவும் சிறையில் இருந்து வெளியே வந்த உடனே போலீசார் அழைத்துச் செல்ல காரணம் என்ன எனவே தனது மகனை போலீசார் என்கவுண்டர் செய்து விடுவார்களோ என்ற அச்சம் இருப்பதாகவும் ஜாமினில் வந்த மகனை உடனடியாக எங்கு வைத்துள்ளார்கள் என போலீசார் தெரிவிக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க பேட்டி அளித்தது குறிப்பிடத்தக்கது. சிறையில் இருந்து வெளிவந்த சகாவை கைது செய்து அழைத்துச் சென்ற போலீசார் யார் என்பதும் கேள்விக்குறியாக உள்ளது குறிப்பிடப்பட்டது.
மகனை என்கவுண்டர் செய்து விடுவார்களோ..?.-அச்சம்- தாய் கண்ணீர்
- by Authour
