கடந்த டிசம்பர் 12ஆம்தேதி அன்று 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோவிலின் குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் தமிழகம் முழுவதும் இருந்து 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதன் தொடர்ச்சியாக கோயிலில் 48 நாட்கள் தொடர்ந்து மண்டல பூஜை நடைபெற்று வந்தது. இந்தநிலையில் மண்டல பூஜை நிறைவு நாளை அடுத்து அறங்காவலர் குழுத் தலைவர் எஸ். முரளி கிருஷ்ணன் தலைமையில் விக்னேஸ்வர பூஜை 108 கலாசாபிஷேகம்,
உள்ளிட்ட சிறப்பு யாகங்கள் நடைபெற்றது, இதனை தொடர்ந்து 108 கலசங்களில் இருந்த புனித நீர் மூலம் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு மகா தீப ஆராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
