Skip to content

பொள்ளாச்சியில் ஜாதி மதங்களை கடந்து காசிக்கு ரயிலில் சென்ற 1500 பக்தர்கள்….

  • by Authour

கோவை மாவட்டம், பொள்ளாச்சி,ஆனைமலை, கிணத்துக்கடவு மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து முதல் முறையாக 10 நாட்கள் காசிக்கு தனி ரயிலில் 1500 பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சென்றனர். இதற்கான தனி சேவையை பாலக்காடு ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது,பக்தர்கள் கூறுகையில் காசிக்கு ரயிலில் செல்வது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது எனவும் ஜாதி, மதங்கள், அரசியல் கடந்து யாத்திரை செல்கிறோம், பத்து

ஆண்டுகளாக ஸ்ரீ திருச்செந்தூர் முருகன் என்ற அமைப்பு நடத்துகிறோம்,காசிக்கு 9 நாட்கள் ரயிலில் பயணம் மேற்கொண்டு காசி, கயா, பிரயகர, அயோத்தி நான்கு சுற்றுலா தலங்களுக்கு சென்று வரும் 8ம் தேதி பொள்ளாச்சி திரும்புகிறோம் முனைவர் ஆண்டாள் சொக்கலிங்கம் அமைப்பில் உள்ளோம், திருச்செந்தூர் குடும்பத்தார் உறவுகள் என தெரிவித்தார்,காசிக்கு செல்லும் பக்தர்களை வழியனுப்பு வந்த குடும்பத்தார் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!