கோவை, பொள்ளாச்சி அடுத்த தம்மம்பதி மலைவாழ் மக்கள் கிராமத்தில் கன்னியம்மன் திருக்கோவில் உள்ளது இக்கோவில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் குண்டம் திருவிழா தொடங்குவது வழக்கம் அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான திருவிழா நேற்று நள்ளிரவு நோன்பு சாற்றுதல் நிகழ்வு தொடங்கியது. இந்த திருவிழாவுக்காக தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து பழங்குடியின மக்கள் தம்மபதிக்கு வருகை புரிந்து பாரம்பரிய இசை அமைத்து அதற்கு தகுந்தால் போல் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை நடனமாடி திருவிழா தொடங்கியது இவர்கள் நடனத்தை

பார்ப்பதற்காக ஆனைமலை சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் மலைவாழ் மக்கள் கூறுகையில் கோவில் திருவிழா தொடங்கியவுடன் வீட்டின் முன்புறம் தீபம் ஏற்றப்பட்டு திருவிழா முடியும் வரை தங்களது பாரம்பரிய இசை நிகழ்ச்சி நடைபெறும் எனவும்இந்த கோவில் திருவிழாவில் 60 அடி நீளம் கொண்ட குண்டம் வளர்க்கப்பட்டு தாங்கள் வேண்டுதலை நிறைவேற்றி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்து வருவதாக தெரிவித்தனர்

