பெரம்பலூர் மாவட்டம் வேலூர், ஊராட்சி தம்பிரான்பட்டி, கிராமத்திலும், ஆலம்பாடி சாலை சமத்துவபுரத்திலும் உள்ள நியாய விலைக்கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் ரொக்கத்துடன்கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகளை பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண்நேரு மாவட்டகலெக்டர் மிருணாளினிதலைமையில் பார்வையிட்டு ஆய்வு செய்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பினை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் , மாவட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல், வருவாய் கோட்டாட்சியர் அனிதா, அட்மா தலைவர் ஜெகதீசன்,பெரம்பலூர் நகர மன்றத் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், துணை பதிவாளர் பெரம்பலூர் தாசில்தார் பாலசுப்பிரமணியன் மற்றும் அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

