Skip to content

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் பொங்கல் விழா- கோலாகலம்

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் பொங்கல் விழா – பாரினர்ஸ் மாணவர்களுடன் கோலாகல கொண்டாட்டம்

தமிழர் திருநாளாம் பொங்கல் விழா தமிழக முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் தூய நெஞ்சக் கல்லூரியில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.

மேலும் இந்த விழாவில் கல்லூரியின் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பொங்கலிட்டு, “பொங்கலோ பொங்கல்” என முழக்கமிட்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

கல்லூரியில் பயிலும் வெளிநாட்டு (பாரினர்ஸ்) மாணவ, மாணவிகளும் தமிழர்களின் பாரம்பரிய

உடைகளான சட்டை – வேஷ்டி, புடவை அணிந்து, தமிழர் கலாச்சாரத்தை போற்றும் வகையில் நடனமாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினர். தமிழர் பண்பாட்டை நேரடியாக அனுபவித்த பாரினர்ஸ் மாணவர்களின் பங்கேற்பு விழாவிற்கு கூடுதல் சிறப்பை சேர்த்தது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் கலந்து கொண்டு பேசுகையில்,
“இக்கல்லூரியில் கல்வி பயின்று, தற்போது திருப்பத்தூர் மாவட்ட வன அலுவலராக பணியாற்றி வருவதில் பெருமை கொள்கிறேன்” என தெரிவித்தார்.

மேலும் விழாவின் ஒரு பகுதியாக மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
தமிழர் பாரம்பரியத்தையும், ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் வகையில், தூய நெஞ்சக்

கல்லூரியில் நடைபெற்ற இந்த பொங்கல் விழா அனைவரிடமும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

error: Content is protected !!