Skip to content

பொங்கல் பண்டிகை.. திருச்சியிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் திருச்சியிலிருந்து, ஆயிரத்து 732 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசு பஸ்களில் பயணிகள் எளிதாக பயணம் செய்யும் வகையில், திருச்சி மண்டல அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில், சென்னை, சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, திண்டுக்கல், பழனி, தஞ்சாவூர் மற்றும் வேளாங்கண்ணி ஆகிய வழித்தடங்களில் திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையத்திலிருந்து 12ம்தேதி (நேற்று) முதல் 15ம்தேதி அதிகாலை வரை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழக்கமாக இயக்கப்படும் பஸ்களும், சிறப்பு பஸ்களும் என மொத்தம் சுமார் ஆயிரத்து 327 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
மேலும், இரவு நேரங்களில் பஞ்சப்பூர் பஸ் நிலையத்திலிருந்து திருச்சி மாநரகப் பகுதிகளுக்கு செல்ல கூடுதலாக டவுன் பஸ்கள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து துறையூர், பெரம்பலூர், அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய ஊர்களுக்கு சுமார் 405 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
பயணிகள், கண்டக்டர்களிடம் பணம் செலுத்தி பயணச்சீட்டு பெறுவதற்குப் பதிலாக ஜிபே, போன்பே, யுபிஐ ஆகிய மின்னனு பரிவர்த்தனைகள் மூலம் பயணச்சீட்டு பெறும் வசதி 10 சதவீதத்திற்கு அதிகமாக பயணிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளதால், பயணிகள் இவ்வசதியை அதிகளவில் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் tnstc.in என்ற இணையதளத்திலும் முன்பதிவு செய்து பயணிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை திருச்சி மண்டல அரசு போக்குவரத்துக்கழக பொதுமேலாளர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!