Skip to content

பூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி…..

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகில் அமைந்துள்ள பூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. கும்பகோணம் கிறிஸ்தவ மறை மாவட்டத்தின் 125 -வது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு இந்த சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. கும்பகோணம் மறை மாவட்ட கிராமங்களில் இருந்து அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.

கும்பகோணம் மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி அடிகளார் கலந்து கொண்டு சிறப்பு திருப்பலியை நிறைவேற்றி அனைவருக்கும் ஆசி வழங்கினார். மறை மாவட்ட முதன்மை குரு அமிர்தசாமி, பேராலய அதிபர் சாம்சன், மறைவட்ட முதன்மை குரு இன்னசென்ட், பூண்டி மாதா பேராலய துணை அதிபர் ரூபன் அந்தோணிராஜ், தியான மைய இயக்குனர் ஆல்பர்ட் சேவியர் மற்றும் கும்பகோணம் மறை மாவட்ட அருட்தந்தையர்கள் கலந்து கொண்டனர்.  கும்பகோணம் மறை மாவட்ட 125-வது ஆண்டு முழுவதும் கிறிஸ்தவர்கள் மறுமலர்ச்சி ஆண்டாக கொண்டாடப்பட உள்ளதாக தெரி விக்கப்பட்டது. பூண்டி மாதா பேராலயத்தில் நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பூண்டி மாதா பேராலய அதிபர் சாம்சன் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!