Skip to content

தஞ்சையில் நாளை மின்தடை… எந்தெந்த பகுதி…?..

தஞ்சாவூர் மாவட்டம் திருமலை சமுத்திரம் துணை மின் நிலையத்தில் நாளை 17ம் தேதி பராமரிப்பு பணிகள் நடப்பதால் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது. எந்தெந்த பகுதிகளில் மின் தடை என்பதை தெரிந்து கொள்ளுங்கள். தஞ்சாவூர் மாவட்டம் திருமலைசமுத்திரம் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. இந்த துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை 17ம் தேதி இங்கிருந்து மின் விநியோகம் பெறும் வல்லம்புதூர், முன்னையம்பட்டி, குருவாடிப்பட்டி, நாட்டாணி, திருமலைமுத்திரம், ஆலக்குடி, கல்விராயன்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது, இதேபோல் செங்கிப்பட்டி பகுதியில் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான செங்கிப்பட்டி, புதுக்குடி, வெண்டையம்பட்டி, வளம்பக்குடி, ராயமுண்டாம்பட்டி, ராயராம்பட்டி, சானூரப்பட்டி, ஆச்சாம்பட்டி, பாளையப்பட்டி, செங்கிப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது. மேலும் அள்ளூர், அல்சகுடி, அம்மையகரம், தென்னங்குடி, பிள்ளையார்நத்தம், சக்கரசாமந்தம், களிமேடு, பனவெளி, கரம்பை, கள்ளப்பெரம்பூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது. மின்தடை காரணமாக ஏற்படும் சிரமத்தை பொறுத்து ஒத்துழைப்பு நல்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் மின்தடை குறித்து புகார் தெரிவிக்க 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை தஞ்சாவூர் மின்சார வாரிய உதவி செயற் பொறியாளர் பாலகுமார் தெரிவித்துள்ளார்.
error: Content is protected !!